கட்டிடக்குழு

Posted in komite

நோர்வே இந்துகலாச்சாரமன்றம் அருள்மிகு சிவசுப்ரமணியர் ஆலயத்திற்கென புதிதாக ஆலயம் அமைப்பதற்காக றொம்மன்(Rommen) என்ற இடத்தில் காணியை கொள்வனவு செய்திருந்தார்கள். அதன்பின் 2011ம் ஆண்டு ஆலய நிர்வாகமானது கட்டிடதுறைசார் நிபுணர்களை தொடர்புகொண்டு கொள்வனவு செய்யப்பட்ட காணியில் புதிய ஆலயத்தை அமைத்து தருமாறு கேட்டிருந்தார்கள். அதற்கமைய 2011ம்ஆண்டு கட்டிடக்குழு ஒன்றை உருவாக்குவதற்காக நிர்வாகத்தால் பொதுச்சபைகூட்டம் கூட்டப்பட்டது. பொதுச்சபைகூட்டத்தில் 150ற்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் கலந்துகொண்டு புதிய ஆலயம் அமைப்பதற்கான அவசியத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டு ஒன்பது(9) உறுப்பினர்களைக்கொண்ட கட்டிடக்குழு தெரிவுசெய்யப்பட்டது.

அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்:
• கட்டிடக்குழுவானது புதிய ஆலயம் அமைக்கும் பணி பூர்த்தியாகும்வரை எவ்வித மாற்றங்களும் இல்லாமல் நிரந்தரமாக இயங்குதல்.
• நிதி சேரிக்கும் பணி மற்றும் நிதியை கையாள்வதும் கட்டிடக்குழுவின் பொறுப்பாகும்.
• நடப்பாண்டு ஆலய நிர்வாகங்கள் கட்டிடக்குழுவின் செயற்பாடுகளில் தலையீடு செய்யாது ஒத்துளைப்பு நல்குதல் வேண்டும்.
• கட்டிடக்குழுவில் தற்போது ஏழு(6) உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இவர்களில் மூன்று உறுப்பினர்கள் கட்ட பொறியியளார்கள்இமற்றைய உறுப்பினர்கள் முகாமைத்துவம் மற்றும் தொழில்சார் அனுபவமுள்ளவர்கள்.

கட்டிடக்குழு உறுப்பினர்கள் விபரம்:
• நாகராஜா கிருபாநிதி
• நடராஜா மகேஸ்வரன்
• தெட்சணாமூர்த்தி நந்தகுமார்
• ராஜரட்ணம் விமலராஜன்
• கனகரட்ணம் பரமேஸ்வரன்
• பாலசுப்ரமணியம் கிரிதரன்

கட்டிடக்குழுவின் முக்கியமான கொள்கைகள்:
• சகலவிதமான கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் வங்கியூடாகவே நடைமுறைப்படுத்தல்.
• அனைத்து கொடுப்பனவுகளும் மூன்று உறுப்பினர்களால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே நடைமுறைப்படுத்தப்படும்.

நிதிசேகரிப்பு:
COVID19, 2020 இல் ஆரம்பிக்கமுன்னர் வீடுகளுக்கு சென்று நிதி சேகரிக்கப்ப்ட்டது. இந்நிலமை தற்போது சாத்தியமில்லாமையால் தொலைபேசி மூலம் மக்களிடம் எமதி நிதி சேகரிப்பாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.

• ஆலயத்தில் நடைபெறும் விசேட தினங்களில் ஆலய மண்டபத்திலும்
• ஓஸ்லோவில் நடைபெறும் பொதுநிகழ்வுகளில் விளம்பரபடுத்தல் மூலமும் சேகரிக்கப்படுகின்றது.
• நேரடியாக பணத்தை செலுத்தவிரும்பினால் ஆலயத்தில் பணத்தை செலுத்தி பற்றுச்சீட்டை உடன் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.(ஆலயத்தில் மட்டும்தான் இந்த நடைமுறை. மற்றைய இடங்களில் நிதிபங்களிப்பானது வங்கியூடாகவே நடைபெறுகின்றது)
• நிதிகேரிப்பாளர்கள் இயங்குகின்றனர். அவர்கள் உங்களிடம் நிதிகேரிப்பிற்கென வடிவமைக்கப்பட்ட படிவம் ஒன்று கையளிப்பார்கள். படிவத்தில் தங்களுடைய முழுவிபரங்களுடன் நீங்கள் பங்களிப்பு செய்யவிரும்பும் தெகையை பதிவு செய்து உங்கள் கையொப்பமிட்டு சேகரிப்பாளர்களிடம் கையளிக்கவும். கட்டிடக்குழுவானது மின்னஞ்சல் மூலமாக தாங்கள் பங்களிப்பு செய்யக்கூடியதாக உறுதியளித்த தொகையை வங்கிமூலம் செலுத்ததக்கவாறு குயமவரசய வை அனுப்பிவைப்பார்கள். அதன்மூலம் இலகுவாக பங்களிப்பு செய்யமுடியம்.

தாழ்மையான வேண்டுகோள்:
• வீடுவீடாக சென்று நிதி சேகரிப்பதென்பது மிகவும் கடினமான விடயம். எனவே நிதிகேரிப்பாளர்கள் தங்களிடம் வரும்வரை காத்திராமல் முடிந்தவரை நிங்களாகவே நிதிபங்களிப்பை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
• நிதிசேரிப்பிற்காக மேலும் அடியார்களை இணைந்து எம்முடன் செயல்படுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

ஆலயத்தில் சந்நிதிகள் (பிள்ளையார், அம்மன், சிவன், பார்வதி, வைரவர், சன்டிகேஸ்வரர்) தொடர்ச்சியாக ஆலயம் அமைக்கும் பணி நடைபெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

புதிய ஆலயம் சம்பந்தமான மேலதிக விபரங்கட்கு:
கட்டிடக்குழு தொலைபேசி 401 44 741

நன்றி

கட்டிடக்குழு
நோர்வே இந்துகலாச்சாரமன்றம்.