ஆலய உள் சந்நிதிக்கான சிற்பக்கல்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது

விநாயகர் மற்றும் துர்க்கை சந்நிகள் இந்தியாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு சென்ற வாரம் (06.11.21) இல் கப்பலில் சென்னையிலிருந்து ஒஸ்லோவிற்கு அனுப்பிவைகப்பட்டுள்ள‌து. இவை மார்கழி கடைசியில் ஓஸ்லோ வந்தடையும். இந்தியாவிலிருந்து சிற்பிகளை இங்கு வரவழைப்பதற்கான விசா கோரும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்படுகிண்றது என்பதை அடியவர்களுக்கு அறியத்தருகிறோம்.

ஆலய கீழ் மண்டபம் பாவனைக்கு தயாராகவுள்து

புதிய ஆலய கட்டிடத்தில் அமைத்துள்ள மண்டபத்தை பல அடியார்கள் திருமண வைபவம் போன்ற விழாக்களை நடாத்த விரும்புவதாலூம், இதனால் வரும் வருமானத்தை கட்டட நிதியிற்கு பயன்படுத்தலாம் என்பதாலும் மண்டபத்தை பாவனைக்கு விடுவது என சைவப்புலவர் வசந்தன் குருக்கள் மற்றும் அவரின் சகாக்களின் ஆலோசனையுடனும்  ஆலய நிர்வாகமும் கட்டடக்குழுவும் முடிவு செய்து 01.09.21 இல் கிரஹப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத்தருகிறோம். ஆலய கீழ் மண்டபத்திற்கு மட்டும் கிரஹப்பிரவேசம் செய்யப்பட்டது. COVID 19 கட்டுப்பாடுகள் காரணமாக குருமார்கள் ஆலய நிர்வாகம், கட்டிடகுழு, மட்டுமே  இந்நிகழ்வில் பங்கு கொண்டார்கள். இந்நிகழ்வில் இருந்து பிரதமகுரருக்கள் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர்களின் வருகையை 31.08.21 வரை நிச்சயப்படுத்த முடியாமல் இருந்தது. இக்காரணத்தினால் எமது அங்கத்தவர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் உரிய நேரத்தில் அறிவிக்கமுடியாமைக்கு மனம் வருந்துகிறோம். ஆலய மண்டபத்தை அடியவர்கள் மங்களகர நிகழ்வுகளுக்கான பாவனைக்கு பதிவு செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு ஆல்ய காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும். இதில் வரும் வருமானம் நடைமுறை செலவுகளுக்கும் (மின்சாரம், இதர வரிகள்) ஆலய கட்டட நிதியிற்கும் வலுச்சேர்க்கும். அடியவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் உள்ள சூழ்நிலைக்கு நாம் மனம் வருந்துகிறோம்.

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட அடியவர்களுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பார்வையிட வர விரும்பும் ஒவ்வொருவரும் கீழேயுள்ள இணைப்பை அழுத்தி முன்கூட்டியே பதிவு செய்யவும்.

COVID19 காரணமாக வரும் அடியவர்களின் பெயர், தொலைபேசி மற்றும் வருகை தரும் நேரத்தை தாங்கள் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

நேரத்தை பதிவு செய்யுங்கள்

முக்கிய குறிப்பு: ஆலயம் Ammerud இல்தான் நடைபெறுகிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

இங்கனம்
ஆலய கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்

 

Dear devotees

We are pleased to announse that  you can now view the new temple building at Karen Platous vei 4., 0988 Oslo. Please follow the  link to choose the day you wish to visit. 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefnRET7hFTKoWGxDbBYFQ0ciEo4PHdD3XAvEovXgqX0lpUQw/viewform 

NB. Daily temple activities are held in Ammerud. We hope that we can move the deities to the new temple in second quarter 2022

 

Everest விளையாட்டுகழகம் 50000 குரோணர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

ஆலய கட்டட‌க்குழுவால் தமிழர் விளையாட்டு கழகங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நிதியுதவி வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வேண்டுகோளுக்கு செவிமடுத்து Everest கழகம் 50000 குரோணர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. முதன்முதலாக விளையாட்டுகழகங்கள் என்னும் வகையில் நிதியுதவி வழங்கிய கழகம் என்னும் பெருமையை இக்கழகம் பெற்றுள்ளது என்பதை நாம் மிக மகிழ்ச்சியுடன் அடியார்களுக்கு அறியத்தருகிறோம். இவர்களின் செயல் ஒர் முன்னுதாரணமாக திகழும் என நாம் நம்புகிறோம். ஆலயம் சார்பில் கழக நிர்வாகத்திற்கும் அதன் அங்கத்தவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

இங்கனம்
ஆலய கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்

கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு செய்துமுடிக்கவேண்டிய வேலைகள்

In English

முருகன் அடியார்களே!

நோர்வேஜிய கட்டட நிறுவனத்தின் வேலைகள் யாவும் முடிவடைந்து புதிய ஆலய கட்டிடத்தை நாம் பொறுப்பேற்றுள்ளோம் என்பதனை தங்களிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உட்புற ஆலய சந்நிதிகள் தவிர மற்றைய சகல வேலைகளும் அழகாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. COVID19 கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தபின்னர் உட்பகுதியை அடியார்கள் பார்வையிட ஒழுங்குகள் செய்யப்படும் என்பதனை அறியத்தருகிறோம். அத்துடன் OBOS 31.07.2021 வரை Ammerud இல் ஆலயத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு செய்துமுடிக்கவேண்டிய வேலைகள்

2022 முற்பகுதியில் ஆலய கும்பாபிஷேகம் நடாத்தவேண்டும். அதற்கு முன்னர் கட்டாயமாக செய்யப்படவேண்டிய திருப்பணிகள்: விமானம் மற்றும் விநாயகர், துர்க்கை, சிவன், பார்வதி, பைரவர்,சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும், கொடித்தம்பம், கொடித்தம்பக்கல், மயூரம், பலிபீடம் , வெளிச்சுவரிற்கு வண்ணம் தீட்டுதல், முன் படியிற்கு கல்(granittflis/ flis)பதித்தல் ஆகியவையாகும். இத்திட்டத்தில் 18 அடி உயரமான கருங்கல்லில் செதுக்கப்படும் விமானமும் உள்ளடங்கும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எமக்கு இன்னும் 6-7 மில்லியன் குரோணர்கள் தேவையாகவுள்ளது.

இத்திருப்பணிகளில் சில சந்நிதிகளிற்கு அடியவர்கள் முழுப்பங்களிப்பையும், சில சந்நிதிகளிற்கு பகுதிப் பங்களிப்பையும் செலுத்தியும் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்கள். இதுவரை பங்களிக்கப்பட்ட மற்றும் பங்களிக்கப்படாத விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஆரம்ப காலத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட சந்நிதிகளையும் விமானத்தையும் கருங்கல்லில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது மக்களில் ஒரு பகுதியினர் தற்போதைய (COVID19) சூழ்நிலையால் பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர். அதனால் நாம் குறுகிய காலத்தில் 6-7 மில்லியன் பணத்தை சேர்ப்பது சாத்தியமற்றதாகும். காலத்தின் கட்டாயத்தால் ஆரம்ப திட்டத்தில் சில தற்காலிக மாற்றங்களை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆலய விமானம் திட்டமிட்டபடி 18 அடி உயரமாக, கருங்கல்லில் கட்டுவதற்கு 3-4 மில்லியன் குரோணர்கள் (இத்தொகை மேற்குற்ப்பிட்ட 7 மில்லியனில் அடங்கும்) தேவையாகவுள்து. அதேசமயம் விமானத்திற்குரிய நிதி உடனடியாக திரட்டும் சூழ்நிலையில்லாததால் ஸ்தபதியின் அலோசனைப்படி ஒர் சிறிய தற்காலிக விமானத்தை சீமெந்தினால் செய்து கும்பாபிஷேகத்தை 2022 இல் நடாத்தத் திட்டமிடுள்ளோம். இத்தற்காலிக விமானத்துடன் கும்பாபிஷேகம் செய்வதற்கு எமக்கு தற்போது தேவைப்படும் நிதி 3-4 மில்லியன் குரோணர்களாகும். இத்திட்டத்தில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட கருங்கல் விமானத்திற்கு பதிலாக தற்காலிக விமானம் அமைக்கப்படும். மற்றயை வேலைகள் யாவும் ஆரம்பத் திட்டப்படி நிர்மாணிக்கப்படும். தற்போதைய அசாதாரண சூழ்நிலை மாறியபின்னர் அடியவர்களிடம் நிதியைப் பெற்று பின்னர் கருங்கல்லினால் திட்டமிட்டபடி விமானத்தை அமைக்கலாம். ஆலய கட்டிடத்தை பாவனைக்குட்படுத்துவதற்கு (midlertidig brukstillatelse) மாநகரசபைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பம் சார்பாக மாநகரசபை எம்மிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார்கள். அக்கேள்விகளானது விமானம், ஆலயகோபுரம், மற்றும் வெளிச் சிற்பவேலைகள் எப்போது நாம் அமைப்போம் என்பதாகும்.

புதிய ஆலயச் சிற்ப வேலைகள் விநாயகர் சந்நிதியும் அம்மன் சந்நிதியும் தை மாதத்திற்குள் செதுக்கப்பட்டு நோர்வேயிற்கு அனுப்பிவைக்கப்படும் என ஸ்தபதி உறுதியளித்துள்ளார். இச்சந்நிதிகள் எதிர்வரும் சித்திரை மாதத்தில் இங்கு வந்தடையும், சிற்பிகளும் அதே நேரத்தில் இங்கு வந்து வேலைகள் ஆரம்பிக்கும் நிலைமை உருவாகும் என நம்புகிறோம்.

குறிப்பு: அம்மன் சந்நிதி, கொடித்தம்பம், தம்பக்கல், பைரவர் மற்றும் ஆறுமுகசாமியின் சந்நிதியிற்கு முழுமையாக நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விபரம் மேல் அட்டவணையில் கொடுக்கப்படவில்லை.

ஆலய கும்பாபிசேகத்தை 2022 இல் நடாத்துவதற்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.
“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

இங்கனம்
ஆலய நிர்வாகம், கட்டடகுழு
நோர்வே இந்து கலாச்சார மன்றம்